undefined

விஜய்க்கு  அரசியல் அனுபவமில்ல...  நடிகை குஷ்பூ பதிலடி! 

 


 தவெக தலைவர் விஜய். இவர் திருச்சியிலிருந்து தமது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில் அரியலூர்  பிரச்சாரத்தில் பாஜக அரசின் கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.  செப்டம்பர் 13, 2025 ம் தேதி  நடந்த இந்த பிரச்சாரத்தில் விஜய் “ஒரு நாடு, ஒரு தேர்தல்” திட்டத்தை “ஜனநாயக கொலை” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.  பீகாரில் 60 லட்சம் வாக்காளர்கள் தேர்தல் பட்டியலில் இல்லை என்றும், பிரதேசீய தேர்தல் அமைப்பை அழிக்கும் முயற்சி எனக் கூறினார்.  தேர்தல் மீளவரம்பு  திட்டம் தென்னிந்தியாவின் அரசியல் வலிமையை குறைக்கும் சதி எனக் கூறியுள்ளார்.  


 விஜய்யின் 2026 தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பாஜகவை “அரசியல் எதிரி” எனக் கூறியிருந்தார். விஜய்யின் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  பாஜக தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் குஷ்பு சுந்தர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.அதன்படி இன்று நடந்த  பத்திரிகையாளர் சந்திப்பில், குஷ்பு “வரலாறு தெரிந்துகொண்டு விஜய் பேச வேண்டும்” என்று அறிவுறுத்தினார். விஜய்யை தனது “இளைய சகோதரர்” என கூறிக் கொண்டார்.  அவரது குற்றச்சாட்டுகள் அரசியல் அனுபவமின்மையால் வருவதாகக் கூறினார்.

மேலும்  “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது புதிதான விஷயம் இல்லை. இதற்கு முன்னாடி இருந்தது. காங்கிரஸ் கூட்டணி அவர்களுக்கு சாதகமாக இருக்கவேண்டும் என்பதற்காக பிரித்து வைத்திருந்தார்கள்.விஜய்  என்னுடைய தம்பியாக இருந்தாலும் கொஞ்சம்  அரசியல் வரலாறு என்ன என்பதை தெரிந்துகொண்டு பேசவேண்டும். இது புதிதாக நாங்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் என பேசவில்லை. ஏற்கனவே இருந்த ஒன்றை திரும்பி கொண்டுவரவேண்டும் என்றுதான் சொல்கிறோம்” என தெரிவித்துள்ளார்.  அதனைத்தொடர்ந்து விஜய்யால் வெற்றிபெற முடியுமா? என்ற கேள்விக்கு  குஷ்பூ அதனை மக்கள் தான் முடிவு செய்வார்கள்” எனவும் தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?