undefined

 ஆன்மிக சுற்றுலா... சுசீந்திரம், நாகர்கோவில் பகுதிகளில் நடிகை நயன்தாரா வழிபாடு!

 
 

இந்த சம்மருக்கு பெரும்பாலான நடிகர், நடிகைகள் ஸ்விட்சர்லாந்து, லண்டன் என்று குளிர் பிரதேசங்களுக்கு ஜாலி டூர் சென்றுள்ள நிலையில், தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியில் உள்ள கோயில்களுக்கு நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சென்று வழிபாடு செய்தார்.நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று  தரிசித்து பிரார்த்தனை செய்து வருகிறார். அந்த வகையில் கன்னியாகுமரியில் உள்ள பிரபல கோவில்களில் நேற்று சென்ற நயன்தாரா, சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டார். 


நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கன்னியாகுமரி அருகே உள்ள புகழ்பெற்ற  சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு தட்சிணாமூர்த்தி, கொன்றையடி, தாணுமாலயன், திருவேங்கட விண்ணவரம் பெருமாள், ராமர், விஸ்வரூப ஆஞ்சநேயர் உள்ளிட்ட சாமிகளை வழிபாடு செய்தனர்.  இதையடுத்து, அடுத்ததாக நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி அங்கும் சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சாமிதோப்பில் உள்ள  அய்யா வைகுண்டசாமி கோவிலுக்கும்  சென்று தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்ற விக்னேஷ் சிவன் நயன்தாரா  தம்பதி அங்கும் சாமி தரிசனம் செய்தனர்.நயன்தாரா வந்திருப்பது குறித்து  அறிந்த அவரது ரசிகர்கள் ஏராளமானவர்கள் கோவில்களில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!