undefined

தலைக்கேறிய போதை... கள்ளக்காதலியை வெறித்தனமாய் வெட்டிக் கொன்ற வாலிபர்!

 

போதை தலைக்கேறிய நிலையில், அதற்கு மேலும் குடிக்க மது கேட்ட கள்ளக்காதலி அனுமதிக்காத காரணத்தால் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலியை வாலிபர் வெட்டிக் கொன்ற சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே நகரைச் சேர்ந்தவர் பாபாஜான் (40). இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ள நிலையில், கோலார் மாவட்டம் சீனிவாசப்பூரை சேர்ந்தவர் ரமிஜாபி (25) எனும் திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் தனிமையில் சந்தித்து அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இது குறித்து இருவரின் குடும்பத்தினருக்கும் தெரிய வந்ததால் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்தனர். இதையடுத்து பாபாஜான், மனைவி- பிள்ளைகளை விட்டும், ரமிஜாபி தனது கணவர், குழந்தைகளை விட்டும் பிரிந்து குடிபண்டே டவுனில் தனியே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, இருவரும் கணவன்-மனைவியாக வசித்து வந்தனர்.

இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததால் நேற்று மாலையும் வழக்கம் போல் இருவரும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். இதில் ரமிஜாபிக்கு போதை தலைக்கேறியுள்ளது. அப்போது மேலும் மது கேட்டு பாபாஜானிடம் அடம் பிடித்துள்ளார். ஆனால் அவர் மது கொடுக்க மறுத்த நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாபாஜான், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து ரமிஜாபியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ரமிஜாபி துடிதுடித்து உயிரிழந்தார்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்த நிலையில் குடிபண்டே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமிஜாபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, பாபாஜானை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?