undefined

ஆடிப்பூரம்... நாளை இந்த மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!

 

தமிழகம் முழுவதும் நாளை ஆடிப்பூரம் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், விருதுநகர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆடிப்பூர விழாவினை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நாளை ஆடிப்பூர விழா நடைபெற உள்ள நிலையில், உள்ளூர் பக்தர்களும் ஆடிப்பூர விழாவில் கலந்துக் கொள்ள வசதியாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான கஞ்சி வார்த்தல் மற்றும் பாலாபிஷேக நிகழ்வு நாளை ஜூலை 28ம் தேதி காலை காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. இந்ந்நிகழ்ச்சியை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி தாளாளர் உமாதேவி ஜெய்கணேஷ் தொடங்கி வைக்க உள்ளார்.  

இந்நிலையில் நாளை ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில்  ஆக்ஸ்ட் 9ம் தேதி பணி நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று நாளை ஆடிப்பூரம் விழாவினை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், உள்ளூர் பக்தர்களும் தேரோட்டத்தில் கலந்துக் கொள்ள வசதியாக நாளை விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து 28ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்டு 9ம் தேதியை வேலை நாளாகவும் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?