ஆடிப்பூரம்... ஜூலை 28ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் உத்தரவு!
ஜூலை 28ம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா ஜூலை 28 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து, அன்றைய நாள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை நாளில் ஜூலை 28 ம் தேதி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களுடன் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 9 ம் தேதி பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!