ஆப்கானிஸ்தானில் பலி எண்ணிக்கை 800; 4500 பேர் படுகாயம்.. ஆதரவு கரம் நீட்டிய இந்தியா!

 

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரோடு கொத்து கொத்தாக  மக்கள் புதையுண்ட நிலையில் பலி எண்ணிக்கை 800 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 2500 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா ஆதரவு கரம் நீட்டியுள்ளது.  ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவியை இந்தியா செய்யும் என பிரதமர் மோடியும், மத்திய வெளியுறவு துறை மந்திரி மந்திரியும் தெரிவித்தனர்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/Gg4hR04FNLo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Gg4hR04FNLo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

நேற்றிரவு 11.47 மணிக்கு ஆப்கானிஸ்தானின் கிழக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் நகங்கர் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.

அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்களால் நகங்கர் மாகாணத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்து உள்ளது. 2,500 பேர் காயமடைந்து உள்ளனர். இந்நிலநடுக்கம் தொடர்ச்சியாக, குனார் மாகாணத்தில் உள்ள 3 கிராமங்கள் முழுமையாக உருக்குலைந்து விட்டது என தலீபான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தருணத்தில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா ஆதரவு கரம் நீட்டியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?