சென்னைக்கு அடுத்ததாக இனி கோவையிலும் டீ, காபி விலை உயர்வு..!
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் டீ காபி விலைகள் உயர்த்தப்பட்டன. இதனால் நடுத்தர ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இதனைத் தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட விலையின் படி டீ- ரூ.20, காபி- ரூ.26க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு குறித்து கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர் நல சங்கத் தலைவர் கடந்த 4 ஆண்டுகளாக டீ, காபி , பேக்கரி வகைகள் விலை உயர்த்தப்படவில்லை.
கடை வாடகை, ஊழியர் சம்பளம், மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாக தான் தற்போது இந்த விலையை ஏற்ற முடிவு செய்யப்பட்டு இருப்பதாக சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.சமீப காலமாக விலைவாசி உயர்வு நடுத்தர மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினர் மாதாந்திர பட்ஜெட்டை மீறி செலவுகள் கடும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். காய்கறிகள் தொடங்கி தங்கம் வரை விலைகள் தாறுமாறாக விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
இப்படி இருக்க பொதுமக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை மாநகர் முழுவதும் தற்போது டீ, காபி விலையானது உயர்த்தப்பட்டு இருப்பதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் கூறியுள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், பால் விலை, டீ, காபி தூள்களின் விலை மற்றும் போக்குவரத்து செலவு உட்பட மூலதன செலவுகளின் அதிகரிப்பே இந்த முடிவுக்கு காரணம் என விளக்கம் அளித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!