எய்ட்ஸ் நோய் அதிர்ச்சி... மகனை கொன்று தாயும் தற்கொலை... கதறித் துடித்த மகள்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வந்த 40 வயது தொழிலதிபர் தனது மனைவி, மகள், மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, பரிசோதனையில் அவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மனைவியும் பிள்ளைகளும் பரிசோதனை செய்து கொண்டனர். அதில், 38 வயது மனைவிக்கும், 9 வயது மகனுக்கும் நோய் தொற்று உறுதியாகிய நிலையில், 17 வயது பிளஸ்-2 மாணவியான மகளுக்கு மட்டும் பாதிப்பு இல்லை என முடிவில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலால் மன உளைச்சலில் ஆழ்ந்த தாய், “மகளுக்கும் இதே நோய் பரவிவிடுமோ” என்ற அச்சத்தால் தன்னையும் மகனையும் முடித்துக் கொள்ள முடிவு செய்தார்.
நேற்று முன்தினம் இரவு, மகன் தூங்கிக் கொண்டிருக்கையில் தலையணையால் மூச்சுத் திணறச் செய்து கொன்று, பின்னர் சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்த மகள் தாய் மற்றும் தம்பியை இவ்வாறு கண்டதும் அதிர்ச்சியில் அலறியுள்ளார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க