undefined

நவதிருப்பதி கோவிலில் ஐப்பசி பிரம்மோற்சவ கருடசேவை... குவிந்த பக்தர்கள்!

 

ஐப்பசி பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி தொலைவில்லிமங்கலத்தில் உள்ள நவதிருப்பதி கோவிலில் கருடசேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நவதிருப்பதிகளில் 4-வது கோவிலும், இரட்டை திருப்பதி கோவில்களிலும் ஒன்றான தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோச்சனர் கோவிலில் ஐப்பசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. நேற்று 5-ம் திருவிழாவையொட்டி கருடசேவை நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு விஸ்வரூபம், காலை 8 மணிக்கு திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி, காலை 9.30 மணிக்கு உற்சவர் செந்தாமரை கண்ணன், ஸ்ரீதேவி, பூதேவி, தாயார்களுடன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், நாலாயிர திவ்விய பிரபந்தம் அத்யாபகர்கள் கீழத்திருமாளிகை ராமானுஜம் ஸ்வாமி, அரையர் சாரங்கன் ஸ்வாமி தலைமையில் சேவித்தனர். சாத்துமுறை கோஷ்டி தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 4.30 மணிக்கு சாயரட்சை நடந்தது. 4.40 மணிக்கு உற்சவர் செந்தாமரை கண்ணன் மற்றும் தேவர் பிரான் கருட மண்டபம் எழுந்தருளினார்.

5.40 மணிக்கு கருட வாகனங்களில் உற்சவர் செந்தாமரை கண்ணன், தேவர் பிரான் சுவாமிகள் சப்பரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து மாடவீதியை வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.  திருவிழாவின்போது தினமும் மாலை 5 மணிக்கு யானை வாகனம், சந்திரபிரபை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வருகிறார். வருகிற 13-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!