பறவை மோதியதால் ஏர் இந்தியா விமான சேவை ரத்து... பயணிகள் கடும் அவதி!
சமீபகாலமாக விமானப் பயணங்கள் சவாலானதாகவும், சர்ச்சையை கிளப்புவதாகவும் அமைந்துள்ளன. இந்நிலையில் விஜயவாடாவில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பறவை மோதியது. இதனால் உடனடியாக அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் விமானம் ஓடுபாதையில் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென கழுகு ஒன்று மோதியது. இதனால் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது.
தொழில்நுட்ப நிபுணர்கள் விமானத்தை பரிசோதனை செய்து, சேதத்தை சரிசெய்யும் பணிகளை தொடங்கினர். சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
சேதம் காரணமாக விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்தது. மேலும் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. சமீபத்தில், 272 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம் பறவை மோதியதால் நாக்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!