undefined

அஜித்குமார் லாக்கப் மரணம்...  5 காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ க்கு  அனுமதி!

 
 


 
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் . இவர் லாக்கப் விசாரணையில் மரணமடைந்த நிலையில் இந்த கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட ஐந்து காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மத்திய புலனாய்வு பணியகம்  மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், ஐந்து காவலர்களையும் காவலில் வைத்து விசாரித்து, ஆகஸ்ட் 6ம் தேதி  மாலை 5:30 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்துமாறு சிபிஐ-க்கு உத்தரவிட்டது.


அஜித்குமார், ஜூன் 27, 2025 அன்று, நகை திருட்டு வழக்கில்  விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு  தனிப்படை காவலர்களான கண்ணன், ஆனந்த், பிரபு, ராஜா, மற்றும் சங்கரமணிகண்டன் ஆகியோரால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, குறிப்பாக அஜித்குமார் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.   

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் காவலில் விசாரிக்க சிபிஐ கோரிய மனுவை நீதிமன்றம் ஏற்றது.இந்த வழக்கில், சிபிஐ டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  அஜித்குமாரின் குடும்பத்திற்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது,  உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி அவரது குடும்பம் மனு தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, வழக்கில் மேலும் தீவிர விசாரணைக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?