அட்சய திருதியை... இன்று மஞ்சள் கொடுத்தால் சுமங்கலி யோகம்.. எதை தானம் செய்தால் என்னென்ன பலன்கள்?!
இன்று அட்சயதிருதியை முன்னிட்டு எதை தானம் கொடுத்தால் என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம். இது தங்கம் வாங்கி சேமித்து வைப்பதற்கான நாள் கிடையாது. நீங்கள் எதைச் செய்தாலும்... ஆமாம்... எந்த நல்ல காரியங்களைச் செய்தாலும் அது வளர்பிறையாய் வளரும்.ஒவ்வொரு மாதமும் திருதியை திதி வரும் என்ற போதிலும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த 3 ம் நாள் அட்சய திருதியை அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் தான் அஷ்டலட்சுமிகளும் அவதாரம் எடுத்தார்கள். திருமகள் விஷ்ணுவின் மார்பில் இடம் பிடித்தாள் . இத்தகைய சிறப்புடைய நன்னாளில் தான் என்ன காரியம் செய்தாலும் வெற்றி நமக்கே என்பதை கொண்டாடும் வகையில் தான் அட்சய திருதியை அனுசரிக்கப்படுகிறது.
அட்சயதிருதியை என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் செய்வதற்கும் சிறந்த நாள். ஏழை , எளிய மக்களுக்கு நம்மால் இயன்றவரை இந்நாளில் தானம் செய்திட சுபிட்சமான வாழ்வு அமையும் என்பது ஐதிகம். அந்த வகையில் நடப்பாண்டில் அட்சய திருதியை இன்று ஏப்ரல் 19ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. செல்வத்தை அள்ளித்தரும் இந்த நன்னாளில் தானங்கள் செய்பவர்களுக்கு புண்ணியம் பல மடங்கு பெருகும்.
இன்று தண்ணீரை தானமாக வழங்கினால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு தண்ணீர் கொடுத்து தாகம் போக்கினால் இறையருளை பெறலாம். குங்குமத்தை தானமாக வழங்கினால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிட்டும். மஞ்சளை தானமாக வழங்கினால் தீர்க்க சுமங்கலி யோகம் பெறலாம்.
வெல்லம், நெய், உப்பு இவைகளை தானமாக வழங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். புத்தாடைகள் தானமாக கொடுத்தால் இறைவனின் ஆசியை பெறலாம். பால், தயிர் தானமாக வழங்கினால் செல்வ செழிப்பை பெறலாம். சந்தனத்தை தானமாக வழங்கினால் ஆரோக்கியமான வாழ்வை பெறலாம். இந்நாளில் குலதெய்வத்தை பிரார்த்தித்து , இஷ்ட தெய்வத்தை வணங்கி இயன்ற அளவு தானம் செய்திட வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!