மதுரைக்குள் நுழைந்தார் அழகர்... எதிர்சேவையில் அதிரும் கோவிந்தா கோஷம்!
Apr 22, 2024, 12:35 IST
தங்கப்பல்லக்கில் கண்டாங்கிப் பட்டுடுத்தி, கையில் நேரிக்கம்பு ஏந்தி, வேத மந்திரங்கள் முழங்க வர்ணக்குடை, தீவட்டி, பரிவாரங்கள், மற்றும் கல்யாணசுந்தரவல்லி யானை முன் செல்ல அழகர் கோயிலில் இருந்து புறப்பட்ட அழகர், இன்று காலையில் மதுரை நகரத்துக்குள் நுழைந்தார். மதுரை நகரின் எல்லையான மூன்று மாவடி பகுதியில் அழகரை எதிர்கொண்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழங்க எதிர்சேவை செய்து வரவேற்றனர்.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!