இன்ஸ்டாகிராமில் அசத்தலான அப்டேட்... இனி தானாகவே அடுத்தடுத்த ரீல்ஸ் ஓடும்!
இன்ஸ்டாகிராமில் விரைவில் வருவிருக்கின்ற அப்டேட் இப்போதே பயனர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இன்ஸ்டாகிராமில் இனி தானாகவே அடுத்தடுத்த ரீல்ஸ் ஓடும் வகையில் புதிய அப்டேட் வெளியாக இருக்கிறது.
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் மற்றொரு சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-ல் தொடங்கப்பட்டது. முதலில் போட்டோக்கள் மட்டும் பதிவிடும் வகையில் இன்ஸ்டாகிராம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, ஆட்டோ ரீல்ஸ் என்ற ஆப்ஷன் கொண்டு வரப்பட உள்ளது.
இனி பயனர்கள் ரீல்ஸைப் பார்க்க ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த அம்சம் சில பீட்டா பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரீல்ஸ் பட்டனை கிளிக் செய்து ஆட்டோ ரீல்ஸ் ஆன் செய்தால் தானாகவே அடுத்தடுத்த ரீல்ஸ்கள் ஓட தொடங்கும். பிற வேலைகளைச் செய்துகொண்டே இன்ஸ்டாகிராம் பார்ப்பவர்களுக்கு இந்த ஆப்ஷன் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிகிறது. தற்போது, இந்த அம்சம் ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டு வருகிறது. விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கும் எனத் தெரிகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!