undefined

 ரஜினி, செளந்தர்யா கணவர் உட்பட வாழ்த்த வந்த விஐபிக்களுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான வாட்ச் கொடுத்து அசத்திய அம்பானி! 

 
 தொழிலதிபர் அம்பானி தனது மகனுக்கு மாப்பிள்ளை தோழர்களாக வாழ்த்த வந்திருந்த திரை நட்சத்திரங்களுக்கு நடிகர் ரஜினி, செளந்தர்யாவின் கணவர் உட்பட அனைவருக்கும் ரூ.2 கோடி மதிப்பிலான வாட்ச் கொடுத்து அசத்தி இருக்கிறார்.தொழிலதிபர் அம்பானி மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சண்ட்டுக்கும் கடந்த 12ம் தேதி மும்பையில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு அசத்தினர். கோலிவுட்டில் இருந்து நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, நயன்தாரா, ஜோதிகா, விக்னேஷ் சிவன், இயக்குநர் அட்லி உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர்.


இதில் ஆனந்த் அம்பானிக்கு மாப்பிள்ளை தோழர்களாக நடிகர்கள் ரன்வீர் சிங், ஷாருக்கான் உள்ளிட்டப் பலர் இருந்தனர். அவர்களுக்கு Audemars Piguet பிராண்ட் வாட்ச் கொடுத்து அசத்தி இருக்கிறார் அம்பானி. இந்த வாட்சின் மதிப்பு. ரூ. 2 கோடி என்பதுதான் ஆச்சரியத் தகவல். மாப்பிள்ளை தோழர்கள் இந்த வாட்சோடு சேர்ந்து எடுத்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!