பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ விபத்து.... 8 பேருக்கு தீவிர சிகிச்சை... அதிர்ச்சி வீடியோ!
 

 

புதுச்சேரி நகரப் பகுதியான மகாத்மா காந்தி வீதியில் தனியார் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மூலகுளம் மற்றும் அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச்செல்லப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்றும் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். 

அப்போது புஸ்ஸி வீதியில் ஆட்டோ வந்தபோது, புதிய பேருந்து நிலையம் நோக்கி எதிரே வந்த பேருந்து ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 8 குழந்தைகளுக்கு தலை, கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டதும் ஆட்டோவில் இருந்த குழந்தைகள் அலறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

<a href=https://youtube.com/embed/KkZoocbqItU?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/KkZoocbqItU/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="பேருந்து - ஆட்டோ மோதல் - வெளியான சிசிடிவி காட்சி ! | Puducherry Bus Auto Accident | Tamil News" width="853">

உடனே அந்த வழியாக சென்றவர்கள், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடிச்சென்று விபத்தில் சிக்கிய ஆட்டோவில் இருந்து சிறுமிகளை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததனர். அங்கு சிறுமிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மூலக்குளத்தை சேர்ந்த நிக்கிஷா (10), அவந்தீகா (10) ஆகியோர் தலையில் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டிருப்பதை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.  ஆட்டோ ஓட்டுநர் விக்னேஷ் (22) என்பவரும் காயம் அடைந்தார். 

இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி நேரில் வந்து நலம் விசாரித்து சிகிச்சையை தீவிரப்படுத்த உத்தரவிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர், பெற்றோர்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். ஆறு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  அவர்களின் இரண்டு பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.  மருத்துவர்கள் விரைவாக செயல்பட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.  

சில பெற்றோர்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறினர்.  ஆனால், அவர்களுக்கு இங்கேயே தரமான மருத்துவ சிகிச்கைக்கான வசதிகள் செய்துதர  நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.அறுவை சிகிச்சை மருத்துவர்களும் அறுவை சிகிச்சை கூடங்களும் தயார் நிலையில் உள்ளது.  குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.  அனைவரும் விரைவாக குணமடைய இறைவனை வேண்டுவோம், என்று தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!