அனிருத் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்!
முண்ணனி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவர் தனுஷின் '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
12 ஆண்டுகளில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவர் தான் சமீபத்தில் வெளியான மதராஸி படத்திற்கு இசையமைத்திருந்தார். அதனை தொடர்ந்து ஜனநாயகன், ஜெயிலர் 2 ஆகிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை இசையமைப்பாளரான அனிருத் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் கொடுக்கப்பட்டன. கோவிலுக்கு வெளியே வந்ததும் ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!