undefined

தேர்தல் 2024 : மோடி முதல் நாளும், கடைசி நாளும் தமிழகத்தில் தான்... அண்ணாமலை நெகிழ்ச்சி!

 

 இன்று ஜூன் 1ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளும் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளன. இந்நிலையில் பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்கள், மீடியாக்களும் கருத்துக்கணிப்புக்களை வெளியிடத் தொடங்கிவிட்டன. இது குறித்து பாஜக சார்பில் அண்ணாமலை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியா முழுவதும் தேர்தல் பரப்புரையை பொறுத்தவரையில் தமிழகத்தின்  பங்களிப்பு மிக மிகப் பெரியது.  தேர்தல் பரப்புரையின் கடைசி நாளில் எங்களுடைய 2  பெரிய தலைவர்கள் நமது தமிழ் மண்ணில் இருக்கிறார்கள்.

மோடியை   பொறுத்தவரை  அவருடைய  பரப்புரையை தொடங்கியது தமிழகத்தில் தான். தற்போது கடைசி பரப்புரை தருவாயிலும் எங்கள் கட்சியின் 2  தலைவர்களும் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்கள். அவர்கள் இருவருக்கும் எங்களது கட்சிக்கும் தமிழகத்தின் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு.
தேர்தல் கடைசி பரப்புரை நாளில் இருவரும் தமிழகத்தில் இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பரப்புரையில் தமிழகத்தின் பங்கு அதிக அளவில் இருக்கும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதன் பிறகு மக்கள் கடமையை செய்திருக்கிறார்கள். நாங்களும் எங்களது கடமை செய்திருக்கிறோம். ஜூன் 4ம் தேதி அதற்கான முடிவு தெரியும் எனத்   தெரிவித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!