இஸ்ரோ புதிய தலைவர் வி.நாராயணன் நியமனம் ... முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த முனைவர் வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
#Chandrayaan2, #Chandrayaan3, #AdityaL1, #Gaganyaan என உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்குக் காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த - தொடர்ந்து பங்களித்து வரும் #Narayanan அவர்களின் தலைமையில் #ISRO உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும்! நாராயணன் அவர்களின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்” என பதிவிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!