undefined

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 21 பேர் பலி... ஈக்வடாரில் பெரும் சோகம்!

 

ஈக்வடாரில் உள்ள குவாரந்தா–அம்பாடோ சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளனாதில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈக்வடாரின் மலைப்பாதைகளில் விபத்துகள் அடிக்கடி நடைபெறும் நிலையில், குவாரந்தாவிலிருந்து அம்பாடோ நோக்கி பயணித்த பேருந்து சிமியாடுக் பகுதியில் மலைச்சரிவை கடக்கும் நேரத்தில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. ஆழமான பள்ளத்தாக்கு நோக்கி சற்றுச் சாய்ந்த பேருந்து சில வினாடிகளில் சாலையை விட்டு விலகி கீழே விழுந்தது. பல மீட்டர் ஆழத்தில் விழுந்த பேருந்து உடனே நொறுங்கி, உள்ளே இருந்த பயணிகள் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்பு பணியாளர்கள், தீயணைப்பு படை, காவல்துறை ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து பகுதிகளில் சிதறிக் கிடந்த பயணிகளை தேடி மீட்பது பல மணி நேரம் நீடித்தது. இதில் 21 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணத்தை முதற்கட்டமாக விசாரித்த அதிகாரிகள், மலைப்பாதையின் கூரான வளைவு மற்றும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது ஆகியவை விபத்திற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிவித்தனர். அதே நேரத்தில் பேருந்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதையும் விசாரணை குழு பரிசீலித்து வருகிறது.

இந்த சம்பவத்தால் உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். மலைப்பாதை பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!