undefined

உலக கோப்பை நேரத்தில் பெருந்துயரம்... 'அங்கிள் பெர்ஸி' காலமானார்! கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

 

எந்த நாட்டு பிரஜையாக இருந்தால் என்ன... எப்படி திரைப்படங்கள், இசை, கல்வி, கலைகள் எல்லாம் சாதி, மதம், இனம், மொழிகளைக் கடந்து சர்வதேச அளவில் மக்களை ஒருங்கிணைக்கிறதோ அப்படி உலகம் முழுவதுமே கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் பெர்ஸி அபேசேகர. கிரிக்கெட் ரசிகர்களால அன்புடன் செல்லமாக அங்கிள் பெர்ஸி. இலங்கை கிரிக்கெட் அணியினர் கலந்து கொள்ளும் அனைத்து போட்டிகளிலும் முன்னின்று அணி வீரர்களை உற்சாகப்படுத்துவார் பெர்ஸி. எந்த பலனையோ, பிரபலமாவதையோ அவர் நோக்கமாக கொண்டிருக்கவில்லை. பிரதிபலன் பார்காமல் தீவிர இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகராக வலம் வந்தார். இந்நிலையில், பெர்ஸி அபேசேகர தனது 87வது வயதில் காலமானார். 

இத்தனைக்கும் பெர்ஸி அபேசேகர கடந்த 1979ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் போதிருந்து இலங்கை அணி விளையாடும் போட்டிகளுக்கு நேரில் சென்று, அணி வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களை உற்சாகப்படுத்தி வந்தார். 1996-ம் ஆண்டு முதல் தான் அவர் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பிரபலமடைந்தார். 

இந்நிலையில், அங்கிள் பெர்ஸியின் மறைவுக்கு இலங்கையின் முக்கிய வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அங்கிள் பெர்ஸி குறித்து நினைவுகளை சனத் ஜெயசூர்யா, குமார் சங்ககாரா உள்ளிட்ட வீரர்கள் பகிர்ந்துள்ளனர். தனது முதல் போட்டி முதல் கடைசி போட்டி வரை அனைத்திற்கும் நேரில் வந்து பெர்ஸி ஆதரவு அளித்தார் என்று குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியினர் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கும் அங்கிள் பெர்ஸி பரிட்சயம். நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்டின் ஒருமுறை தனது ஆட்ட நாயகன் விருதை பெர்ஸியிடம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2015-ம் ஆண்டு விராட் கோலி, டிரெஸிங் ரூமிற்கு பெர்ஸியை அழைத்துச் சென்று தனியே கெளரவித்தார். அதே போல் ரோகித் ஷர்மா, பெர்ஸியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அணிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த தீவிர ரசிகர் பெர்ஸி அபேசேகர. தற்போது உலகக்கோப்பை போட்டியைக் காண செல்லவில்லை. 

உடல் நலக்குறைவு காரணமாக உலக கோப்பைப் போட்டிக்கு நேரில் செல்லாமல் இலங்கையிலேயே இருந்த நிலையில்,  நேற்று உயிரிழந்தார். பெர்ஸியை சாதாரண ரசிகர் என்று சொல்லாமல் சூப்பர் ரசிகர் என்று அனைவரும் கூறுகின்றனர். இலங்கை வீரர்கள் மட்டும் இல்லாமல், பிற நாட்டு கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் பெர்ஸியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!