துப்பாக்கி முனையில் பணம் பறிக்க முயற்சி... தலை தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்... திருச்சியில் அதிர்ச்சி!

 

அரியலுார் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் சத்யன்,  மரவேலைபாடு செய்யும் தொழில் செய்து வருகிறார். அவர் குடும்பத்தினருடன், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிவிட்டு திருச்சி திரும்பும் வழியில் பைபாஸ் ரோட்டிற்கு அருகே உள்ள ஒரு தனியார் உணவகத்தில் சாப்பிட்டபின் மனைவியிடம் பில்லை நான் தந்துவிட்டு வருகிறேன் நீ குழந்தையோடு காரில் போய் உட்கார்ந்திரு எனக்கூற மனைவி காரில் சென்று அமர்ந்திருக்கிறார்.

வண்டியில் இருந்த அவர் மனைவி அருகே  25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ஆட்டோவில் வந்து இறங்கியுள்ளார். திடீரென, அந்த வாலிபர், சத்யன் மகன் சாய் தினேஷை பிடித்து வைத்துக் கொண்டு, கழுத்தில் துப்பாக்கியை வைத்து, பணம், நகைகளை கேட்டு மிரட்டியுள்ளார். இதைப் பார்த்த அவரது மனைவியும் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது அவர்கள் கூச்சல் போடவே, காரிலும், பைக்குகளிலும் அருகே இருந்த சிலர் உதவிக்குவர, மர்ம நபர், சிறுவனை விட்டு விட்டு, அங்கிருந்து அடர்ந்த வயல்வெளிக்குள் ஓடி தப்பி விட்டான். இச்சம்பவம் குறித்து, சத்யன், கோட்டை போலீசில் புகார் அளித்தார். தகவலறிந்த திருச்சி போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது அவர்கள் கூறிய தகவல் உண்மை தான் எனத் தெரிய வந்திருக்கிறது கோட்டை போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை ஆட்டோவில் ஏற்றி வந்த டிரைவர், திருச்சி, அரியமங்கலத்தைச் சேர்ந்த ஸ்டாலின், என்பதை கண்டறிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் அவரை கைது செய்து, ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

துப்பாக்கியை காட்டி மிரட்டியவரை வலைவீசி தேடி வருகின்றனர். துப்பாக்கி காட்டி மிரட்டும் கலாச்சாரம் திருச்சியில் தலை துாக்கியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு புறம் இருக்க 17ம் தேதி இரவு நடந்த இந்த சம்பவத்தை காவல்துறையினர் கசியவிடாமல் காத்தது ஏன் என்பதுதான் இப்பொழுது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

காவல்துறை நட்பு வட்டாரத்தில் சிலரை தொடர்பு கொண்டு பேசினோம், யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல என முணு முணுத்தார் என்னப்பா பிரச்சனை எனக்கேட்ட பொழுது திருச்சி மாநகரில் வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக் கொண்டு வரும் அளவிற்கு சிறப்பான ஸ்பெஷல் டீம் இருந்தது. அது தற்பொழுது சின்னாபின்னமாகி கலைக்கப்பட்டு அதிகாரிகள் அவர்கள் கைக்கு அடக்கமானவர்கள் நியமித்து இருக்கிறார்கள். அதனால் என உதட்டை பிதுக்கியவாறே வேறு வேலையைப்பாருங்கள் என தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்திச்சென்றார். என்னடா இது ஸ்கார்ட்லாண்ட் யார்டு போலீசுக்கு இணையாக இருந்த தமிழக காவல்துறை இப்படி ஆகிடுச்சே என மனதிற்குள் நினைத்துக்கொண்டு வேதனையை வெளிப்படுத்தாமல் விடை பெற்றோம்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!