வங்கிப் பணிகளை திட்டமிட்டுக்கோங்க... மே மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை!
ஏப்ரல் மாதம் முடிவடைய இன்னும் 2 நாட்களே மீதமுள்ளன. அடுத்து வர இருக்கும் மே மாதம் ஓய்வு மற்றும் சுற்றுலா மாதம். இதனால் செலவுகள் எகிறி அடிக்கும். அந்த செலவுகளை முன்கூட்டியே திட்டமிட்டு வங்கிப்பணிகளை முடித்துக் கொள்வது உத்தமம். ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வர இருக்கும் விடுமுறை நாட்கள் பட்டியலை முதல் மாதமே வெளியிட்டு விடுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி பணிகளை திட்டமிட்டுக் கொள்ளும் வகையில் இவை வெளியிடப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் இந்த விடுமுறை நாட்களின் அடிப்படையில் வங்கிப் பணிகளைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மே மாத வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல்
மே 1 - மே தினம்- வங்கி விடுமுறை.
மே 5 - ஞாயிற்றுக்கிழமை
மே 7- 3ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.
மே 8 - இரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் (கொல்கத்தா) வங்கி விடுமுறை.
மே 10 - அட்சய திருதியை / வாசவ ஜெயந்தி (பெங்களூரு) வங்கி விடுமுறை.
மே 11 - 2வது சனிக்கிழமை
மே 12 - ஞாயிற்றுக்கிழமை
மே 13 - 4ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.
மே 16 - மாநில தினம் (காங்டாக்) வங்கி விடுமுறை.
மே 19 - ஞாயிற்றுக்கிழமை
மே 20 - 5ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.
மே 23 - புத்த பூர்ணிமா (ஐஸ்வால், பேலாப்பூர், அகர்தலா, போபால், டேராடூன், இட்டாநகர், சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, ஜம்மு கான்பூர், நாக்பூர், மும்பை, ராஞ்சி, புது டெல்லி, ஸ்ரீநகர், சிம்லா மற்றும் ராய்ப்பூர்) வங்கி விடுமுறை.
மே 25 - 4வது சனிக்கிழமை
மே 26 - ஞாயிற்றுக்கிழமை
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!