undefined

 நாளை பிஇ துணை கலந்தாய்வில் கலந்துகொள்ள  விண்ணப்பிக்க  கடைசி நாள்!

 
 


பொறியியல் மாணவர் சேர்க்கையில் துணைக்கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பதிவு நாளையுடன் நிறைவடைகிறது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு இதுவரை 3 சுற்றுகளாக நடைபெற்று முடிந்துள்ளது. 

இதற்கிடையே 2025-26ம் கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு பொது கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு 12ம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி படித்து சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 2025 பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாத மாணவர்கள் துணைக்கலந்தாய்வுக்கு https://www.tneaonline.org அல்லது https://www.dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம்  விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஆகஸ்ட் 12ம் தேதி நாளையுடன்  அதற்கான விண்ணப்பப்பதிவு நிறைவடைகிறது. தொடர்ந்து துணை கலந்தாய்வு  ஆகஸ்ட் 21ம் தேதி தொடங்க உள்ளது  குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?