உஷார் மக்களே... 2 மாதங்களில் 2 பேர் பலி... லேப்டாப் சார்ஜ் போட்ட போது இளம்பெண் உயிரிழப்பு!
நம்மில் பலரும், செல்போன், லேப்-டாப் போன்றவைகளுக்கு சார்ஜ் போதும் போது மின்சாரம் தாக்காது என்கிற தவறான புரிதலுடன் இருக்கிறோம். அப்படியெல்லாம் கிடையாது. செல்போன் வயர், கேபிள் வயர், லேப்-டாப் என அனைத்திலுமே மின்சாரம் தாக்கும் அபாயம் இருக்கிறது. பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், கவனத்துடனும் மின்சாதனங்களைப் பயன்படுத்துங்க. குறிப்பாக மழைக்காலங்களில் அதிக முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்துங்க.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரை சேர்ந்தவர் செந்திமயில்( 22). இவர் வீட்டில் லேப்டாப்புக்கு சார்ஜ் செய்ய முயன்ற போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். செந்திமயிலின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் செந்திமயில் உயிரிழந்ததை உறுதி செய்த பிறகு, உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், செந்திமயில் லேப்டாப் எடுத்த போது அதில் சார்ஜ் குறைவாக இருந்ததால், லேப்டாப்பிற்கு சார்ஜ் போட முயன்றுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் சார்ஜர் வயரை கையில் பிடித்தவாரே தரையில் சரிந்து விழுந்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!