நாளை பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டம்... குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் தோ்வு?!
குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக ஆட்சி மன்ற குழு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை இறுதி செய்வதற்கு நாளை ஆகஸ்ட் 17ம் தேதி கூட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது உடல்நிலையை காரணம் காட்டி குடியரசு துணைத் தலைவா் பதவியை ஜகதீப் தன்கா் ஜூலை 21ம் தேதி திடீரென ராஜிநாமா செய்தாா். இதையடுத்து குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது.
இந்தத் தோ்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை தோ்வு செய்ய பிரதமா் மோடி, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா இருவருக்கும் அந்தக் கூட்டணி அதிகாரம் வழங்கியுள்ளது. தோ்தலில் எதிா்க்கட்சிகள் சாா்பிலும் வேட்பாளா் அறிவிக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் இருப்பதால், தோ்தலில் அந்தக் கூட்டணி வேட்பாளா் வெற்றிபெற வாய்ப்புக்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!