உலக மீனவர் தினத்தை முன்னிட்டு படகு போட்டி.. அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடியில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நடந்த படகு போட்டியை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி சார்பில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு படகு போட்டி தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையிலிருந்து நடந்தது போட்டிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி கீதா ஜீவன் கலந்து கொண்டு படகு போட்டியை துவக்கி வைத்தார் நிகழ்ச்சிக்கு மாவட்ட மீனோரணி அமைப்பாளர் பி அந்தோணி ஸ்டாலின் முன்னிலை வைத்தார்.
படகு போட்டியில் 14 படகுகள் கலந்து கொண்டனர் முத்துநகர் கடற்கரையில் இருந்து கடலுக்குள் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று திரும்பி வரும் போட்டி நடந்தது இதில் ராஜ் முதலிடத்தையும் விஜய் இரண்டாவது இடத்திலும் ராஜேஷ் மூன்றாவது இடத்திலும் பிடித்தனர் இவர்களுக்கு பரிசுகள் வருகிற 21ஆம் தேதி நடைபெறும் உலக மீனவர் தின விழாவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க