நடிகர் அஜித் வீடு, சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னையில் நடிகர் அஜித் வசிக்கும் வீடு, காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டி உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்று டிஜிபி அலுவலகத்திற்கு அஜித் வீடு உட்பட முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் வந்ததாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று, வெடிகுண்டு நிபுணர் குழு மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். நீண்ட நேர சோதனையின் பின்னர், இவை அனைத்தும் புரளி மிரட்டல் என உறுதிப்படுத்தப்பட்டது.
அதே நேரத்தில், நடிகர் எஸ்.வி. சேகர் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் வீடுகளுக்கும் இதேபோன்ற மிரட்டல் வந்துள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியாக வெளிவரும் போலியான வெடிகுண்டு தகவல்கள் பொது இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்க காரணமாக உள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க