தலைநகரில் பரபரப்பு... 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தலைநகர் தில்லியில் இன்று 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தில்லி துவாரகா பகுதியில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு திங்கள்கிழமை காலை வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுத்திருந்தனர். இதையடுத்து பள்ளி நிா்வாகம் மாணவா்களை பள்ளி பேருந்துகள் மற்றும் தனியாா் வேன்களில் பயணிக்கும் மாணவா்கள் உடனடியாக வீட்டுகளுக்கு திருப்பி அனுப்பினர்.
பெற்றோா்கள் அந்தந்த பேருந்து நிறுத்தங்களில் இருந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லும்படி பள்ளி நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பின்னர், வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் மோப்ப நாய் படை உட்பட தில்லி காவல்துறையின் பல குழுக்கள் மூலம் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டது.
எந்தப் பள்ளிகளுக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி ஹவுஸ் ராணியில் உள்ள சர்வோதயா கன்யா வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் மோப்ப நாய் படை உட்பட தில்லி காவல்துறையின் பல குழுக்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சைபா் செல் மற்றும் சிறப்பு போலீஸ் படை உள்பட பல பிரிவுகள் மின்னஞ்சல் தலைப்புகள் மற்றும் பிற டிஜிட்டல் தடங்களை பகுப்பாய்வு செய்து மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்ப்பபடுகிறது என்பதனை ஆய்வு செய்து வருகின்றன. தேசிய தலைநகர் தில்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுப்பது கடந்த ஆண்டு மே முதல் தொடர்கதையாகி வருவது பெற்றோர்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!