#BREAKING: சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் உயிரிழப்பு!

 

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை மற்றும் கார்த்திகை மாத மகர ஜோதி தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்ட நிலையில், கார்த்திகை  முதல் தேதியில் இருந்தே பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. தரிசனத்திற்கு 5 மணி நேரம் வரையில் பக்தர்கள் காத்திருந்ததாக தகவல்கள் வெளியானது. 

இன்று நவம்பர் 18ம் தேதி சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. மண்டல மகர விழா காலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வருகை தருகின்றனர். இன்று ஒன்றரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் குவிந்ததாக தகவல்கள் வெளியானது.  இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்து சபரிமலை வந்திருந்த ஒரு பக்தர் கூட்ட நெரிசலில் சிக்கிய நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், இறுதியில் மயங்கி விழுந்து பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!