தனியார் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி 30 பேர் படுகாயம்!
கடலூர் மாவட்டம் மேல் புவாணி குப்பம் பகுதியிலிருந்து காடாம் புலியூருக்கு முந்திரி கொட்டை உடைக்கும் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்த பெண்கள் வேனில் பயணம் செய்தனர். இதே நேரத்தில், வடலூரிலிருந்து பெருமாள் ஏரிக்கரை வழியாக பரம்பிபேட்டைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த தனியார் பேருந்தும் அந்தப்பகுதியை வந்தடைந்தது.
இந்த நிலையில் மேல் புவாணி குப்பம் பகுதியில் வேன் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதியதால் பெரிய விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அருகிலிருந்த பெருமாள் ஏரியில் வாகனங்கள் கவிழாமல் கரையோரத்திலேயே நின்றதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலிருந்த கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களைச் சந்தித்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார்.
இதற்கிடையில், விபத்து நேர்ந்த காட்சி சிசிடிவியில் பதிவாகி வெளியானது. அந்த காட்சியில், ஒரே வழி சாலையில் பேருந்து வந்தபோது, எதிரே வந்த வேன் கவனக்குறைவாக நேராக மோதுவது தெளிவாகக் காணப்படுகிறது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியுள்ளதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க