கேபிள் கார் தடம் புரண்டு விபத்து... வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 15 பேர் பலி!
போர்ச்சுகல்லின் தலைநகர் லிஸ்பனில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. குளோரியா புனிகுலர் கேபிள் கார், நகரத்தின் வரலாற்று சின்னமாக கருதப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மத்தியில் இது மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 18 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 5 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேடான தண்டவாளப் பகுதியில் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கேபிள் கார் கட்டடம் ஒன்றின்மீது மோதியததாகச் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த கேபிள் காரில் சுமார் 40 பேர் பயணம் செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது. கேபிள் கார் செலுத்தும் கம்பி வலுவிழந்து போனதால் விபத்து நிகழ்ந்ததாக லிஸ்பன் தீயணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் காரில் இருந்தவர்கள், அருகிலிருந்த பாதசாரிகள் ஆகியோர் அடங்குவர் என்றும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டது.1885ம் ஆண்டு திறக்கப்பட்ட சம்பந்தப்பட்ட ‘ஃபனிக்கியூலர்’ கேபிள் கார், லிஸ்பனின் மத்தியப் பகுதியையும் பைரோ அல்டோ பகுதியையும் இணைக்கிறது. பழுதுபார்ப்புப் பணிகள் குறித்த எல்லா விதிமுறைகளையும் தாங்கள் பின்பற்றிச் செயல்பட்டதாக லிஸ்பன் பொதுப் போக்குவரத்து நிறுவனம் கேரிஸ் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து போர்ச்சுகல் அரசு தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!