undefined

அருப்புக்கோட்டையில் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென நடுரோட்டில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் சென்றவர்கள் உயிர்தப்பினர்.

திருப்பூர் அருகே உள்ள மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (47). இவர் தனது உறவினர் மகன் மனோஜ் என்பவரை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்த்துவிட்டு உறவினருடன் திருப்பூருக்கு இன்று மாலை தனது காரில் புறப்பட்டார். தூத்துக்குடி- மதுரை நான்கு வழிச்சாலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிக்குறிச்சி விலக்கு அருகே கார் வந்தபோது இன்ஜினில் தீப்பற்றியது.

உடனடியாக காரை சாலையில் நிறுத்தி விட்டு சுரேஷ் மற்றும் காரில் இருந்தவர்கள் இறங்கினர். அதையடுத்து, கார் முழுவதுமாக தீப்பற்றியது. தகவலறிந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து பந்தல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!