undefined

கார் மீது லாரி மோதி கோர விபத்து... 5 பேர் உயிரிழப்பு!

 

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாஜஹான்பூர் மாவட்டம் மதன்பூரில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்திற்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் மருத்துவமனைக்கு நேரில் வந்து காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 

"இரண்டு குழந்தைகளுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால், மருத்துவர்களின் பரிந்துரைக்கும் பட்சத்தில் உயர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்று  கூறினார். மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!