காதலிக்குமாறு கல்லூரி மாணவியை மிரட்டிய மாணவர் மீது வழக்குப்பதிவு!
கல்லூரி மாணவியை காதலிக்குமாறு தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் தன்னை காதலிக்குமாறு மாணவியின் கழுத்தை பிடித்து மாணவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவர், அந்த மாணவியை காதலிப்பதாக கூறி பிரச்சினை செய்து வந்தார். இது குறித்து மாணவி கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்திருந்தார். ஆனால் அதனை பொருட்படுத்தாத மாணவர் நேற்று முன்தினம் அந்த மாணவியின் வீட்டிற்கே சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். மாணவி மீண்டும் மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர் உடனே மாணவியின் கழுத்தை பிடித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், மாணவர் மீது திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!