பகீர் சிசிடிவி வீடியோ... ரோட்டில் மூடப்படாத வடிகாலில் சைக்கிளோடு விழுந்த மாணவன்!
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் கைர் சாலையில் உள்ள கோண்டா டர்ன் பகுதியில் பரபரப்பாக செயல்பட்டு வரும் சாலையில் வடிகால் ஒன்று திறந்த நிலையில் விடப்பட்டிருந்தது. இந்த ஆழமான வடிகாலில் பள்ளி மாணவர் ஒருவர் சைக்கிளுடன் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரத்தில் மதகு கட்டிய பிறகு, அந்த இடம் மூடப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்தது. இதனால் சைக்கிளில் வந்த மாணவர் அந்த குழியில் விழுந்துள்ளார். இச்சம்பவத்தை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அதனை கவனித்து மாணவரை உடனடியாக வெளியே இழுத்தனர். மாணவருக்கு சிறிய அளவிலேயே காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவி நகராட்சிக்கு எதிராக மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் நகராட்சி ஆணையர் பிரேம் பிரகாஷ் மீனா நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பவ இடத்தில் உள்ள திறந்தவெளி வடிகால்கள் விரைவில் மூடப்படும் எனவும் கட்டுமானத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!