இன்று முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு... நடிகர் ரஜினி பங்கேற்பு!
இன்று 4வது முறையாக இன்று ஆந்திர முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு. சந்திரபாபுவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு விஜயவாடா சென்றார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, அமித்ஷா உட்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இன்று காலை 11.27 மணிக்கு சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். ஆந்திர சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸை வீழ்த்தி தெலுங்குதேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜூன் 12 நாளை நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
செய்தியாளர்களிடம் இது குறித்து ஆந்திராவின் ஒரே தலைநகரமாக அமராவதி தான் இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம், பழிவாங்கும் அரசியலை செய்யப் போவதில்லை எனக் கூறியுள்ளார். 3 தலைநகர், 4 தலைநகர் என மக்களோடு விளையாட மாட்டோம். அதே நேரம் விசாகப்பட்டினம் வர்த்தக தலைநகரமாக இருக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!