கோயிலுக்கு சொந்தமான ரூ.2.60 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு... அறநிலையத் துறை அதிரடி!
விளாத்திகுளம் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 2.60 கோடி மதிப்பிலான கோயில் நிலம் அறநிலையத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் அயன்பொம்மையாபுரம் கிராமத்தில், விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. இதை மீட்க இந்து சமய அறநிலையத் துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டது.
அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜி.செல்வி தலைமையில் ஆலய நிலங்களுக்கான தனி வட்டாட்சியர் பிரபாகரன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் சு.உமாமகேஸ்வரி, கோயில் ஆய்வாளர்கள் தனு சூர்யா, ஆனந்தராஜ், சிவகலைப்பிரியா, முப்பிடாதி, ருக்மணி, செயல் அலுவலர்கள் பாலமுருகன், தமிழ்செல்வி, ராதா, கணக்கர் மகாராஜன் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவினரால் கோயிலுக்கு சொந்தமான 103 ஏக்கர் புன்செய் நிலம் அடையாளம் காணப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சுவாதீனம் பெறப்பட்டு திருக்கோயில் வசம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அறநிலையத் துறை அதிகாரிகள் குழுவினர், நேற்று அயன்பொம்மையாபுரம் கிராமத்துக்கு சென்று, கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் "இது விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம்" என அறிவிப்பு பலகையை நிறுவினர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!