undefined

குழந்தைகளால் சுங்க வரி செலுத்தாமல் அதிக தங்கத்தை கொண்டு வர முடியும்... உங்களுக்குத்  தெரியுமா ?

 

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9150யைக் கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. ஒரு சவரன் தங்கத்தின் வர்த்தக விலை விரைவில் ரூ.1,00,000யை எட்டி விடும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். நகைகளாக வாங்கும் போது கூடுதலாக ஜிஎஸ்டி சேர்க்கப்படுகையில் விரைவில் ஒரு சவரன் விலை 1,00,000க்கு மேல் எட்டும். 

இந்நிலையில் பலரும் தங்கம் வாங்குவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸை இலாபகரமான மையமாகக் கருதுகின்றனர். சொந்தமாக தங்கச் சுரங்கம் கூட இல்லாத துபாய் ஏன் தங்க நகரம் என்று அழைக்கப்படுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? 

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இவ்வளவு தங்கம் வர்த்தகம் செய்யப்படுவதற்கான முக்கிய காரணம் எமிரேட்ஸில் வரி இல்லாதது தான். இந்தியாவும் நமது அண்டை நாடான சீனாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து அதிகளவில் தங்கம் வாங்குபவர்கள் என்று புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

இந்தியாவில் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும் போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வாங்கும் போது ஒரு கிராமுக்கு ரூ.350 வரை குறைவாக கிடைக்கும். உதாரணமாக சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9150 என்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு கிராமின் விலை ரூ.8691. முக்கிய வேறுபாடு என்னவென்றால், நீங்கள் ரூ.2 லட்சத்திற்கு தங்கம் வாங்கினால், இந்தியாவில் நீங்கள் பெறுவதை விட ரூ.7,000 லாபம் கிடைக்கும். 

ஆனால் முக்கியமானது துபாயில் தங்கம் விலை குறைவாக இருந்தாலும், கட்டுப்பாடுகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் கொண்டு வர விரும்பினால், நீங்கள் சுங்க வரி செலுத்த வேண்டும். பெண்களுக்கு 40 கிராம் (5 சவரன்) மற்றும் ஆண்களுக்கு 20 கிராம் (இரண்டரை சவரன்) என இந்த எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கத்திற்கு பில் கட்டாயம் என்றாலும், ஜிஎஸ்டி தேவையில்லை.

ஆண்கள் 20 கிராமுக்கு மேல் 50 கிராம் வரையிலான தங்கத்திற்கு மூன்று சதவீத சுங்க வரியையும், பெண்கள் 40 கிராமுக்கு மேல் 100 கிராம் வரையிலான தங்கத்திற்கு அதே சதவீத சுங்க வரியையும் செலுத்த வேண்டும். 

அதே சமயம் ஆண்களுக்கு 50 கிராமுக்கு மேல் 100 கிராமுக்கு ஆறு சதவீதமும், பெண்களுக்கு 100 கிராமுக்கு மேல் 200 கிராமுக்கு ஆறு சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. ஆண்கள் 100 கிராமுக்கு மேல் தங்கம் கொண்டு வந்தால், பெண்கள் 200 கிராமுக்கு மேல் தங்கம் கொண்டு வந்தால், அவர்கள் பத்து சதவீதம் வரை செலுத்த வேண்டும் என்கிறது சட்ட விதிமுறைகள். 

ஆனால், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகபட்சமாக துபாயில் இருந்து 40 கிராம் தங்க நகைகளை சுங்க வரி செலுத்தாமல் கொண்டு வரலாம் என்பது தெரியுமா? நீங்கள் 15 வயதுக்குட்பட்ட உங்கள் குழந்தைகளை துபாய்க்கு அழைத்துச் சென்றால், 40 கிராம் வரையில் தங்க நகைகளைக் கொண்டு வரலாம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?