போதையில் கார் ஓட்டிய சிறுவர்கள்.... 9 மாத குழந்தை கருவிலேயே பலி... கதறிய தாய்!
இன்றைய பள்ளி கல்லூரி மாணவர்கள் சாகசங்களில் ஈடுபடுகிறேன் ரீல்ஸ் செய்கிறேன் பேர்வழியில் எதிரில் வருபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் சிறுவர்களின் அட்டகாசங்களும், அதனால் ஏற்படும் விபரீதங்களும் குறைந்தபாடில்லை. குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவர், தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி தீபிகா. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது, தீபிகா 9 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில், ரவி தனது மனைவி மற்றும் 6 வயது குழந்தையுடன் பைக்கில் வந்துள்ளார். அப்போது குடிபோதையில் சிறுவர்கள் ஓட்டி வந்த கார் ரவியின் பைக்கின் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் காயமடைந்த தீபிகா தனது குழந்தையை பிறக்கும் முன்பே இழந்துள்ளார். ரவி சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். ஆனால் அவர்களின் 6 வயது மகள் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!