undefined

  அப்பல்லோவில் முதல்வருக்கு தொடர் சிகிச்சை...  மீண்டும் நேரில் பார்க்க வந்த அழகிரி..!

 


தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு  திங்கட்கிழமை காலை நடைப்பயிற்சியில்  லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்  ஸ்டாலினுக்கு இதயத் துடிப்பில் ஏற்பட்ட சில வேறுபாடுகள் காரணமாகவே தலைசுற்றல் ஏற்பட்டதாக அறிக்கை வெளியிட்டது.

இதய சிகிச்சை மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தலின்படி, முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ சோதனையில் உடல்நிலை இயல்பாக இருப்பது தெரியவந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இந்நிலையில், 5வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதலமைச்சரை, துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன்  சந்தித்து நலம் விசாரித்தனர். 6வது நாளாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர்  ஸ்டாலினின் உடல்நலம் குறித்து விசாரிக்க முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர்  மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?