இன்று முதல் CMRL பழைய பயண அட்டைகள் செல்லாது... மெட்ரோ ரயில் பயணிகளே உஷார்!
இந்த மாற்றம், இந்தியாவில் ஒருங்கிணைந்த பொது போக்குவரத்து அமைப்பை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முயற்சியின் ஒரு பகுதியாகும். NCMC அட்டைகள், சென்னை மெட்ரோ ரயில்கள் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள மெட்ரோ ரயில்கள், பேருந்துகள், மற்றும் பிற பொது போக்குவரத்து சேவைகளிலும் பயன்படுத்தப்படலாம். .
பயணிகள், தங்கள் பழைய CMRL அட்டைகளில் உள்ள மீதித் தொகையை NCMC அட்டைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். இந்த மாற்றத்திற்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் CMRL தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்திற்கு ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ பயணிகள் மத்தியில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. “NCMC அட்டைகள் மூலம் பயணம் எளிதாக இருக்கும் புதிய அமைப்புக்கு மாறுவதற்கு சிறிது காலம் தேவைப்படலாம்,” என வழக்கமான பயணி தெரிவித்துள்ளார். CMRL, இந்த மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, சமூக வலைதளங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் விளம்பரங்களை வெளியிட திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!