இன்று கோவை வருகை... சமூக வலைத்தளத்தில் தமிழில் பதிவு செய்த பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திரா மற்றும் தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று காலை ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டாபர்த்தியில் உள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் புண்ணிய ஸ்தலத்துக்குச் சென்று மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் நடைபெறும் நூற்றாண்டு விழாவிலும் பிரதமர் பங்கேற்கிறார். அந்நிகழ்வில் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை மற்றும் சேவைகளை நினைவுகூரும் வகையில் நினைவு நாணயம் மற்றும் தபால் தலைகள் வெளியிடப்படுகின்றன. கூட்டத்த்தில் பிரதமர் மோடி உரையாற்றவும் உள்ளார்.
இதற்குப் பிறகு மதியம் 1.30 மணியளவில் பிரதமர் கோவையில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் பிஎம்–கிசான் திட்டத்தின் 21வது தவணை நிதியை பிரதமர் வெளியிட உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 9 கோடி விவசாயிகளுக்கான நிதி நேரடியாக வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழ் மொழியில் சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் இந்த மாநாட்டில் ஏராளமான விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. ரசாயனப் பயன்பாடு குறைவாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வேளாண்மையை முன்னிறுத்துவது முக்கியமான முயற்சி. இது நாட்டின் விவசாயத் துறைக்கு நல்ல விளைவை தரும்” என்று குறிப்பிட்டுள்ளார். கோவை மாநாட்டில் அவர் உரையாற்றி பல்வேறு திட்டங்களைப் பற்றிய விவரங்களை அறிவிப்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க