undefined

தொடரும் அதிர்ச்சி!!  நீட் தேர்வு பயத்தால்  மாணவன் தற்கொலை!!  

 

இன்று இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்களுக்கான தகுதி தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்வு எழுத பயந்து மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். புதுச்சேரி அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர்  துரைராஜ். இவர் ரியல் எஸ்டேட் தொழில்  செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளம். இவர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வருகிறார்.   கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.  இதில் பரிமளம்  18 வயது மகன் ஹேமச்சந்திரன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இதில்  ஹேமச்சந்திரன் நீட் தேர்வுக்கு தயார் செய்து வந்தார்.இன்று  நீட் தேர்வு எழுத இருந்த நிலையில்  காலை வீட்டில் உள்ள அறையில் ஹேமச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து  அவரது தாய் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தார் . இவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர்  உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  மாணவனின் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட  விசாரணையில் மாணவன் ஹேமச்சந்திரன் ஏற்கனவே கடந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற வேண்டும். அதை கொண்டு  மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என அவரது தாய் மற்றும் உறவினர்கள் கூறிவந்த நிலையில்  தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சம் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இன்று நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில் தேர்வுக்கு பயந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!