ஆகஸ்ட் 2ம் தேதி கூலி இசை வெளியீட்டு விழா... ரசிகர்கள் கொண்டாட்டம்!
நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2 ம் தேதி நடைபெற இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படத்தின் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இப்படத்தில், அமீர்கான், நாகர்ஜுனா, சத்யராஜ், பகத் பாசில், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.இந்நிலையில், கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!