undefined

 அமேசானில்  காப்-30 மாநாடு தொடக்கம்... அமெரிக்கா பங்கேற்காதது சர்ச்சை!

 
 

உலகளாவிய பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐ.நா. பருவநிலை மாநாடு (காப்-30) பிரேஸிலின் அமேசான் பகுதியிலுள்ள பெலெம் நகரில் திங்கள்கிழமை தொடங்கியது. உலகம் முழுவதும் இருந்து சுமார் 50,000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில், அமெரிக்கா பங்கேற்காதது சர்ச்சையாகியுள்ளது.

பிரேஸில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, “பருவநிலை அவசரநிலை வறுமையையும் சமூக ஏற்றத்தாழ்வையும் தீவிரப்படுத்துகிறது. அமேசான் காடு உலக வெப்பமாதலால் மிகப்பெரும் தாக்கத்தை சந்தித்து வருகிறது. இதை உலகுக்கு உணர்த்துவதற்காகவே இந்த மாநாட்டை பெலெமில் நடத்த முடிவு செய்யப்பட்டது,” என்று தெரிவித்தார். அவர் மேலும், “பருவநிலை மாற்றம் எதிர்கால அச்சுறுத்தல் அல்ல, இப்போதைய பேரழிவு” என்றும் வலியுறுத்தினார்.

ஐ.நா. பருவநிலை செயலாளர் சைமன் ஸ்டீல், “பசுமை இல்ல வாயுக்களை குறைப்பதில் தனிநாடுகள் போதுமான வேகத்தில் செயல்படவில்லை. இந்த மாநாட்டில் வெறும் பேச்சுகள் அல்ல, செயல்பாட்டு முடிவுகள் தேவை,” என்று கூறினார். உலகின் இரண்டாவது பெரிய பசுமை இல்ல வாயு உற்பத்தியாளராக இருக்கும் அமெரிக்கா, அதிபர் டிரம்ப் தலைமையில் இந்த மாநாட்டில் பங்கேற்காதது கண்டனத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 2015-ம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் ஏற்ற இலக்குகளை அடைய முடியாமல் போன நிலையில், காப்-30 மாநாடு மீண்டும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!