undefined

பெண் குழந்தையைக் கடத்தி சென்ற தம்பதி!

 

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஒன்றரை வயது பெண் குழந்தை மர்மமாக காணாமல் போன சம்பவம் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் - கோவை நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் தங்கியிருந்து வாழ்ந்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி தம்பதி இரவு உறங்கிக் கொண்டிருந்த போது, அவர்களின் ஒன்றரை வயது மகள் மாயமானார்.

திடீரென குழந்தை காணாமல் போனதை கண்ட பெற்றோர் பதறியஅவர்கள் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் சுற்றுவட்டார மனிதர்களின் தகவல்களின் அடிப்படையில் தீவிரமாக தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

சுமார் 25 நாட்களுக்கும் மேலான விசாரணைக்குப் பிறகு, குழந்தை கடத்தல் தொடர்பில் நாமக்கலை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி நித்யா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், தம்பதியினர் தங்களுக்கு குழந்தை இல்லாததால் பெண் குழந்தையை கடத்தி சென்றதாக ஒப்புக் கொண்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் குழந்தையை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டதையடுத்து, போலீசார் வழக்கை வேகமாக நீதிமன்றத்தில் முன்னெடுத்து வருகிறார்கள். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், சிறுவர்கள் காணாமல் போகும் வழக்குகளில் கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!