கண்ணாடிப் பாலத்தில் திடீர் விரிசல்... திறப்பு விழா முடிந்து 10 மாசம் கூட ஆகல... சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி!
உலகப்பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று கன்னியாகுமரி. இதனை சுற்றிப்பார்க்க விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது. அங்குள்ள விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.
இதை டிசம்பர் 30ம் தேதி தமிழக முதல்வர் .ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவள்ளுவர் சிலையினை கண்டு களிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் மூலம் நடந்து சென்று கடலின் அழகினை கண்டு குதூகலிக்கின்றனர். அத்துடன், கண்ணாடி இழை பாலத்தில் நடந்து சென்று செல்பி எடுப்பதில் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கண்ணாடி பாலத்தில் ஒரு இடத்தில் மட்டும் விரிசல் அடைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். இதனை தொடர்ந்து, கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, விரிசல் அடைந்துள்ள கண்ணாடியை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.திறப்பு விழா முடிந்து 10 மாசம் கூட ஆகல அதுக்குள்ள விரிசல் என பொதுமக்கள் சலிப்படைந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!