கோடிக்கணக்கில் பண மோசடி... விடுதலை சிறுத்தைகள் கவுன்சிலர் கைது... கலங்கும் திருமா!

 

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட எல்பின் என்கிற நிறுவனத்தின் கீழ் அறம் மக்கள் இயக்கம், அறம் டிவி உள்ளிட்ட பல்வேறு துணை நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. சிவகாசி புகழ் ஜெயலட்சுமியும் இவர்களிடம் ஏமாந்தவர்களில் ஒருவர். தமிழ்நாடு முழுவதும் பணம் இரட்டிப்பு, பல்வேறு வகையான பொருட்கள் வழங்கல், வெளிநாடு சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு கவர்சிகரமான திட்டங்களை அறிவித்து எல்பின் நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஆசை வார்த்தையை நம்பி மோசம் போன பலர் அந்த நிறுவனத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் முதலீடு செய்தனர்.

அந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை முறையாக வழங்காமல் பண மோசடி செய்ததாக பல முறை அந்த நிறுவனத்தின் மீது தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததால் இவ்வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர். புகாரின் அடிப்படையில் நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்வது வழக்கமாகிப்போனது.

அதேடு மட்டுமல்லாது முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை என ஜி எஸ் டி அதிகாரிகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனை செய்தனர். தற்போது அந்த நிறுவனம் செயல்படவில்லை என்பது வேறு விஷயம். இந்நிலையில் உயர்நீதிமன்றம் உத்தரவின்படி எல்ஃபின் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் நிறுவனத்தின் உரிமையாளர்களான ராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் உள்ளனர்.

இந்த நிறுவனத்தோடு தொடர்புடையவர்கள் யார் யார்? மக்களிடம் பணத்தை ஏமாற்ற காரணம் யார்? என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர். அதனடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விடுதலை தொழிலாளர் முன்னணியின் மாநில துணைச்செயலாளரும், திருச்சி மாநகராட்சியின் 17வது வார்டு மாமன்ற உறுப்பினருமான பிரபாகரனை சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று கைது செய்தனர். 2002ம் ஆண்டு பொன்மலையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருமாவளவனுக்கு தேர்தலின் பொழுது செலவு செய்வதற்காக காரின் டோர்களில் மறைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 கோடி பணம் அரியலூர் அருகே கைப்பற்றப்பட்டது அந்த வழக்கிலும் பிரபாகரன் பெயர் பேசப்பட்டது. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அயல்நாடுகளுக்குச் சென்று ஹாயாக இருப்பது பிரபாகரனின் வாடிக்கை. இதெற்கெல்லாம் முக்கிய மூளையாக செயல்படுபவர் பழனி முருகனின் பெயரைக் கொண்ட ஒரு வழக்கறிஞராம். இவர் ஒரு கோடி ரூபாய்க்கு வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். இவரையும் கூடிய விரைவில் விசாரணை வளையத்திற்குள் காவல்துறை கொண்டு வரும் என்கிறார்கள்.

திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் அப்துல்காதர், இவரது மனைவி ஆயிஷா பானு. இருவரும் காதர் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் சீட்டு நடத்தி மக்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு தலை மறைவாகி விட்டனர். இது குறித்து ஒரு சிலர் புகார் கொடுத்துள்ளனர். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. இவர்களிடம் முதலீடு செய்தவர்கள் காஜாமலை மன்னார்புரம் பல்துறை வணிக வளாக கட்டடத்தில் இயங்கி வரும் பொருளாதார குற்றப்பிரிவில் நேரில் வந்து புகார் கொடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

பாஜக அர்சையும், லஞ்சம் வாங்குகிறார்கள்.. பொதுமக்களின் பணத்தை ஏமாற்றுகிறார்கள் என மேடைக்கு  மேடை பேசி வரும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா, இது குறித்து இதுவரை எதுவும் பேசாமல் இருப்பதும், நடவடிக்கை எடுக்காததும் ஏன் என்று பேசுகிறார்கள் தொண்டர்கள். மக்களின் பணத்தை ஏமாற்றி பிழைப்பவர்களுக்கு கட்சியில் பதவியா? என்கிற கேள்வியும் எழுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உண்மையாக உழைக்கும் தொண்டர்கள் நிறைய பேர் இருக்க,  இப்படி கட்சிப் பதவிகளை அலங்கரிக்கும் விடுதலை சிறுத்தைகள் அடுத்தடுத்து இப்படியான மோசடி புகார்களில் சிக்குவது குறித்து திருமா கலங்கியிருப்பதாக கட்சி பிரமுகர்கள் வருத்தப்படுகிறார்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்