undefined

கொடூரம்... தந்தை கண்முன்னே கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்... ஒருதலைக் காதலால் விபரீதம்!

 

கல்லூரி மாணவி ஒருவரை கடந்த 3 ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்த இளைஞர், தந்தை கண் முன்பாகவே கல்லூரி மாணவியை கத்தியால் குத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே மேல்நேத்தப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி (19) ஒருவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். 

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி மேல்நேத்தப்பாக்கம் கூட்ரோட்டில் இருந்து, அங்கு காத்திருந்த  தனது தந்தையுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்து, இடது கை பகுதிகளில் வெட்டி விட்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கலவை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கவியரசு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வெளியான தகவல்படி, கல்லூரி மாணவியை கடந்த 3 ஆண்டுகளாக ஒருதலையாக கவியரசு காதலித்து வந்துள்ளார். கவியரசுவைக் காதலிக்க மறுத்த காரணத்தால் கல்லூரிக்கு சென்று திரும்பிய மாணவியை தந்தை கண் முன்னே கவியரசு கத்தியால் குத்தியுள்ளார். அதில் படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?